Monday 2 April 2012

சித்திரை மாத சிறப்புகள்

  • சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். 
    இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.
  • சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன், அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
  • சித்திரை மாத திருதியை திதியில் மகாவிஷ்ணு மீன் (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. 
  • சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
  • சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.
  • சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படுகிறது. 
  • சொக்கநாதர் - மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும்.
  • சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
  • கள்ளழகர் வைகை ஆற்றில் எதிர்சேவை விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
  • சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது.
  • சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment