Wednesday, 11 May 2011

ஆன்மீகம் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர்...

விரும்பும் வண்ணமாக காட்சி தரும் கடவுள்..!


ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், “நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?” என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், “ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி”, என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.

விவேகானந்தர் பொன்மொழிகள் சில • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
 • இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
 • நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
 • நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
 • இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.
 • இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.
 • ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.
 • ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
 • பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
 • எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
 • சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
 • வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
 • இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
 • எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.
 •  உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

மகாத்மா காந்தியடிகள் சொன்ன ஆன்மீகம்...மகானின் சில ஆன்மீக சிந்தனைகள்:


·        பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.
·        கீதையை வழிபாடு செய்வது என்பது கிளிப்பிள்ளை போல பாராயணம் செய்வது அல்ல. அதன் உபதேசப்படி நடப்பதே கீதையைப் பின்பற்றுவதாகும். கண்ணன் காட்டிய வழியில் நடப்பதற்கு வழிகாட்டியாக கீதையை படிக்க வேண்டும்.
·        வழிபாடு உண்மையானதாக இருக்க வேண்டும். வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் வழிபாட்டில் லயிக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற பரிபூரணமான கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட வேண்டும்.
·        சத்தியமே நான் கடைபிடிக்கும் மதம். அகிம்சையே அதற்கான வழி. அறிவையும் விட சத்தியம் மேலானதாகும். யார் ஒருவன் ஆணவமே இல்லாமல் பணிவின் இருப்பிடமாகத் திகழ்கிறானோ அவனே சத்தியத்தை காண்கின்ற பாக்கியத்தைப் பெறுவான்.
·        உண்மையாக நடக்க விரும்புகிறவன் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒப்புக் கொள்ளவும், அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். 
·        நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன். அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன். ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.
·        ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று. அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
·        இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
·        எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
·        ராமநாமத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும் தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
·        உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு. 

ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (சுவாமி விவேகானந்தர்)

கடவுளின் கருணையை பற்றி "சுவாமி விவேகானந்தர்" கூறிய ஒரு குறிப்பு...
'''கடவுளிடம் மன வலிமையை கேட்டேன்... கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவைத்தார்""
""கடவுளிடம் மூளை பலத்தையும் உடல் பலத்தையும் கேட்டேன்... நான் தீர்வுக்கான வாழ்கையில் பல புதிர்களை அளித்தார்""
""கடவுளிடம் மகிழ்ச்சியை கேட்டேன்... சில மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு கட்டினார்""
""கடவுளிடம் ஆதரவை கேட்டேன்... ஆதரவற்ற பலரை எனக்கு காண்பித்தார்""
""கடவுளிடம் மன அமைதியை கேட்டேன்... பிறர்க்கு உதவுவது எப்படி என்று எனக்கு காண்பித்தார்""
""நான் ஆசைப்பட்ட எதையும் கடவுள் எனக்கு தரவில்லை....
ஆனால்...
என் வாழ்கைக்கு அவசியமானது அனைத்தையும் கடவுள் எனக்கு அருளினார்""

Tuesday, 10 May 2011

ஆன்மீகம்


பார்வையாளர்களுக்கு முதற்கண் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

முதலில் நாம், ஆன்மீகத்தைப் பற்றி அறிஞர்கள், கவிஞர்கள், போன்றோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.