Wednesday 16 November 2011

கார்த்திகை மாதம்

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கார்த்திகை மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்றும் இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை தீபம்: இது கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படுகிறது. இது திருவண்ணாமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் உயர்ந்தவர் என போட்டி எழுகிறது. அப்பொழுது சிவப்பெருமான் தனது தலை எது? கால் எது? (அடி, முடி) என கண்டுபிடிக்குமாறு இருவரிடமும் கூறுகிறார். ஆனால் அவ்விருவருமே அதில் தோற்றுவிடுகின்றனர். அப்பொழுது அவர்களுக்கு தீபஜோதியாய் சிவபெருமான் காட்சியளித்த இடம் திருவண்ணாமலை என்பதால் அண்ணாமலை தீபம் என்றே இதை அழைகிறோம்.

இதே நாளில் பார்வதி தேவி ஆறு குழந்தைகளாக இருக்கும் முருகப்பெருமானை ஒரே உருவமாக மாற்றி ஆறுமுகத்தானை உருவாக்கியதால் கார்த்திகை தீபத் திருநாள் முருகன் கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகள் தோறும் அகல்விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். கோயில்களில் ஜோதி ஸ்வரூபமாய் இருக்கும் சிவனைக் குறிப்பிடும் வகையில் சொக்கப்பனைக் கொளுத்தி வழிப்படுகின்றனர்.

இது மட்டுமல்ல; கார்த்திகை மாதத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. எப்படி புரட்டாசி மாதம் வந்தவுடன் சீனிவாசப்பெருமாளை "கோவிந்தா, கோவிந்தா" என கோஷம் கேட்கிறதோ, அப்படியே இம்மாதம் "ஸ்வாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் கேட்கும்.

No comments:

Post a Comment